ஹவாய் காட்டுத்தீ - நாளுக்கு நாள் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
15 ஆவணி 2023 செவ்வாய் 09:40 | பார்வைகள் : 5225
அமெரிக்காவின் ஹவாய் மாகணத்தில் காட்டுத்தீ பற்றி எரிந்து பல அசம்பாவிதத்தை ஏற்படுத்தி இருந்தது.
தற்போது சிறப்பு குழுவினர் குடியிருப்புகள் மற்றும் வாகனங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
நாளுக்கு 10 முதல் 20 சடலங்கள் வரையில் மீட்கப்படும் வாய்ப்பிருப்பதாக ஆளுநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஞாயிறன்று வரை வெளியான தகவலின் அடிப்படையில் இறப்பு எண்ணிக்கை 96 என தெரியவந்துள்ளது.
மட்டுமின்றி, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்காவில் ஏற்பட்ட மிக மோசமான காட்டுத்தீ இதுவென குறிப்பிடுகின்றனர். ஆளுநர் ஜோஷ் கிரீன் தெரிவிக்கையில், மொத்த இறப்பு எண்ணிக்கை உறுதி செய்ய மேலும் 10 நாட்கள் வரையாகலாம் என்றார்.
லஹைனா நகரம் முழுவதும் கிட்டத்தட்ட தீயில் கருகியுள்ளது. 12,000 மக்கள் வசித்து வந்த இந்த நகரத்தில் இருந்து மக்கள் தப்பியிருக்க வேண்டும் அல்லது மொத்தமாக தீயில் சிக்கி இறந்திருக்கலாம் என்றார்.
சிறப்பு குழுவினர் சடலங்களை மீட்டு வருவதாகவும், ஆனால் அடையாளம் காண கால தாமதமாகலாம் என்றார். லஹைனா நகரத்தில் இதுவரை 3 சதவீதம் மட்டுமே தேடப்பட்டுள்ளதாகவும், மோப்ப நாய்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத்தீ ஏற்பட்ட பின்னர் இதுவரை 2,000 மக்கள் மாயமாகியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆளுநர் கிரீன் தெரிவிக்கையில், மாயமானவர்கள் எண்ணிக்கை தற்போது 1,300 என்றார்.
லஹைனாவில் தீ இன்னும் மோசமாக எரிகிறது ஆனால் சுமார் 85 சதவீதம் வரையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். தீ எப்படி ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை.
டோரா சூறாவளி மற்றும் வறட்சி காரணமாக ஏற்பட்ட காற்றால் மிக மோசமாக பரவியது என அதிகாரிகள் தரப்பு விளக்கமளித்துள்ளனர்.