Vitry-sur-Seine : 450 அகதிகள் வெளியேற்றம்!!
17 சித்திரை 2024 புதன் 07:04 | பார்வைகள் : 16725
இல் து பிரான்சுக்குள் தங்கியுள்ள அகதிகளை வெளியேற்றும் பணி இடைவிடாது இடம்பெற்று வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளை கருத்தில் கொண்டு இந்த வெளியேற்றம் இடம்பெற்று வருகிறது.
இன்று ஏப்ரல் 17 ஆம் திகதி புதன்கிழமை காலை Vitry-sur-Seine (Val-de-Marne) நகரின் rue de Seine வீதியில் சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்த அகதிகள் பலர் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
அதிகாலை 6 மணிக்கு சம்பவ இடத்துக்கு வருகை தந்த 250 வரையான காவல்துறையினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் அனைவரும் இணைந்து அகதிகள் வெளியேற்றினர். அவர்கள் பேருந்துகளில் ஏற்றப்பட்டு பிரான்சின் வேறு நகரங்களுக்கு (?) அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவர்கள் மொத்தமாக 450 பேர் இருந்ததாகவும், அவர்களிடம் பிரான்சில் வசிப்பதற்குரிய முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan