டுப்பாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளப் பெருக்கு.... திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்...!
17 சித்திரை 2024 புதன் 08:09 | பார்வைகள் : 3167
டுப்பாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.
இதனை தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு காரணமாக பாடசாலைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதோடு அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
டுபாயில் பாலைவனம் நிறைந்த பகுதிகள் அதிகளவில் உள்ளன.
வெப்பநிலையும் அதிகரித்து காணப்படும் சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், சாலைகளில் நீர் தேங்கியது.
பல இடங்களில் வாகன போக்குவரத்தும் முடங்கியது.
கனமழை மற்றும் வெள்ளம் எதிரொலியாக, விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.