இஸ்ரேலின் சிறிய படையெடுப்பும் கடுமையான பதிலடிக்கு வழிவகுக்கும்! ஈரான் எச்சரிக்கை
18 சித்திரை 2024 வியாழன் 08:37 | பார்வைகள் : 2986
இஸ்ரேலின் சிறிய அளவிலான படையெடுப்பும் கூட பாரிய பதிலடிக்கு வழிவகுக்கும் என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துணை தூதரக தாக்குதலில் இரு ஜெனரல்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக ஈரான் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது.
இதற்கு பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என இஸ்ரேலின் நட்பு நாடுகள் அதனிடம் வலியுறுத்தி வருகின்றன.
இந்த வார தொடக்கத்தில், ஈரானின் பாரிய வான்வழித் தாக்குதலுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதை இஸ்ரேல் தீர்மானிக்கும் என்று நெதன்யாகு கூறினார்.
இந்த நிலையில், ''பிராந்தியத்தில் இஸ்ரேலின் மிகச்சிறிய படையெடுப்பு கூட பாரிய மற்றும் கடுமையான பதிலைக் கொண்டுவரும்'' என ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) எச்சரித்துள்ளார்.
வருடாந்திர இராணுவ அணிவகுப்பில் உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்த இராணுவ அணிவகுப்பு அரசு தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை.
ஒருவேளை இலக்கு வைக்கப்படுவதை தவிர்க்க இவ்வாறு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.