Paristamil Navigation Paristamil advert login

Saint-Denis : 34 கிலோ போதைப்பொருள், துப்பாக்கிகள் மீட்பு!

Saint-Denis : 34 கிலோ போதைப்பொருள், துப்பாக்கிகள் மீட்பு!

18 சித்திரை 2024 வியாழன் 11:09 | பார்வைகள் : 7680


Saint-Denis (Seine-Saint-Denis) நகரில் இருந்து 34 கிலோ போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள், ரொக்கப்பணம் போன்றவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

இச்சம்பவம் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடமெப்ற்றுள்ளது. போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்  மேற்கொண்ட நடவடிக்கையில் மேற்படி தடைசெய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. Saint-Denis நகரில் இருந்து இயங்கும் குழு ஒன்று பதுக்கி வைத்திருந்த 23 கிலோ எடையுள்ள கஞ்சாவும் களியும், 11  கிலோ  உலர்ந்த கஞ்சாவும், 43,000 யூரோக்கள் பணமும், நான்கு ரைபிள் வகை துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

Porsche Cayenne SUV வாகனம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதேவேளை, Bobigny, Pré-Saint-Gervais, Pantin மற்றும் Romainville நகரங்களில் இருந்து நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்