Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை: வழக்கில் புதிய திருப்பம்

கனடாவில் 6 இலங்கையர்கள் படுகொலை: வழக்கில் புதிய திருப்பம்

19 சித்திரை 2024 வெள்ளி 17:22 | பார்வைகள் : 1871


கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்ட இலங்கையரான ஃபேப்ரியோ டி சொய்சா, தற்போதைக்கு பிணை கோர எதிர்ப்பார்க்கவில்லை என வழக்கறிஞர் ஊடாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

19 வயதான ஃபேப்ரியோ டி சொய்சா கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதுடன், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

35 வயதுடைய தர்ஷனி ஏகநாயக்க என்ற தாயும் அவரது ஏழு வயதான மகன், நான்கு மற்றும் இரண்டு வயது நிரம்பிய இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மாதங்களேயான குழந்தை உள்ளிட்ட நான்கு பிள்ளைகளும் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கொல்லப்பட்டனர்.

அத்துடன், குறித்த வீட்டில் வசித்து வந்த 40 வயதுடைய காமினி அமரகோன் என்ற அவர்களது நண்பர் ஒருவரும் கொல்லப்பட்டிருந்தார்.

இந்த கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலேயே அவரது வீட்டில் கல்வி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் இருந்து சென்று வசித்துவந்த ஃபேப்ரியோ டி சொய்சா கைதுசெய்யப்பட்டார்.

கொலைகளின் தன்மைக்கேற்ப சந்தேகநபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

என்றாலும், சந்தேகநபர் கொலைக் குற்றச்சாட்டு வழக்கில் தமக்கு பிணை வேண்டாம் என தெரிவித்துள்ளதாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்