Paristamil Navigation Paristamil advert login

பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் - முதன்முறையாக இடம்பெற்ற ஒட்டகத்திருவிழா!

பல்வேறு சர்ச்சைகளின் பின்னர் - முதன்முறையாக இடம்பெற்ற ஒட்டகத்திருவிழா!

21 சித்திரை 2024 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 2243


நேற்று ஏப்ரல் 20 ஆம் திகதி சனிக்கிழமை ஒட்டகத்திருவிழா ஒன்று இடம்பெற்றிருந்தது. 50 வரையான ஒட்டகங்கள் அணிவகுத்துச் சென்று பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

Château de Vincennes (Val-de-Marne) பகுதியில் இந்த ஒட்டக அணிவகுப்பு இடம்பெற்றது. இதில் ஒட்டகக்குடும்பங்களைச் சேர்ந்த நான்குவகையான ஒட்டகங்கள் பங்குபற்றியிருந்தன. ஒற்றைத் திமில் கொண்ட dromedaries ஒட்டகங்களும், ஒட்டகச் சகோதரர்கள் என அழைக்கப்படும் llamas மற்றும் alpacas ஆகிய ஒட்டகங்களு, இரட்டைத் திமில் கொண்ட Bactrian ஒட்டகங்களும் அணிவகுப்பில் கலந்துகொண்டன.

இந்த ஒட்டகக் கண்காட்சி முதலில் பரிசில் ஈஃபிள் கோபுரத்துக்கு முன்பாக இடம்பெற இருந்த நிலையில், பரிஸ் காவல்துறையினர் அதற்கு தடை விதித்தனர். அதன் பின்னரே Château de Vincennes இல் இடம்பெற்றது. பிரான்சில் ஒட்டகக் கண்காட்சி ஒன்று இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்