Paristamil Navigation Paristamil advert login

11 மணிக்குப் பின்னர் சிறுவர்களுக்கு ஊடரங்கு சட்டத்தை விரும்பும் மக்கள்!

11 மணிக்குப் பின்னர் சிறுவர்களுக்கு ஊடரங்கு சட்டத்தை விரும்பும் மக்கள்!

21 சித்திரை 2024 ஞாயிறு 07:08 | பார்வைகள் : 1804


இரவு 11 மணிக்குப் பின்னர் நாட்டில் சிறுவர்கள் வெளியில் செல்வதற்கு தடை கொண்டுவரப்படும் சட்டம் ஒன்றை விரும்புவதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

18 வயதுக்கு கீழுள்ளவர்கள் இரவு 11 மணிக்குப் பின்னர் வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்படவேண்டும் என 67% சதவீதமானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் அனைத்து நகரங்களுக்கும் இது கொண்டுவரப்படவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

CSA எனும் கருத்துக்கணிப்பு நிறுவனம் CNEWS, Europe 1 மற்றும் the Journal du Dimanche ஆகிய ஊடகங்களுக்காக இந்த கருத்துக்கணிப்பை மேற்கொண்டிருந்தது.

அதேவேளை, 33% சதவீதமானவர்கள் ‘ஊடங்கு வேண்டாம்’ எனவும் கருத்து தெரிவித்துள்ளனர். (இவர்களில் பெரும்பாலானோர் 18 தொடக்கம் 24 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது)



*இந்த கருத்துக்கணிப்பு ஏப்ரல் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,011 பேரிடம் தொலைபேசிவழியாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்