Paristamil Navigation Paristamil advert login

WhatsApp-ல் Metaவின் AI Chatbot அம்சம் அறிமுகம்.....

WhatsApp-ல் Metaவின் AI Chatbot அம்சம் அறிமுகம்.....

21 சித்திரை 2024 ஞாயிறு 07:13 | பார்வைகள் : 1327


Facebook-ன் தாய் நிறுவனமான Meta செயற்கை நுண்ணறிவு (AI) சாட்போட்டின் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் Meta AI Assistant சேவைகள் தொடங்கப்பட்டாலும், சமீபத்தில் தான் Meta தனது AI Assistant-ஐ WhatsApp, Facebook, Messenger மற்றும் Instagram தளங்களுடன் இணைத்துள்ளது.

Meta AI Chatbot Llama 3 Large Language Model அடிப்படையில் செயல்படுகிறது.

Open AI நிறுவனத்தின் ChatGPT போல, Meta AI Chatbot பயனர்கள் கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் பதில்களை வழங்குகிறது.

இதனைக் கொண்டு செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், வாட்ஸ்அப்பில் நிகழ்நேர படத்தை உருவாக்க முடியும் என்று Meta தெரிவித்துள்ளது.

Meta AI உதவியுடன், உரைகளை (text) பதிவேற்றினால், படங்களை எளிதாக உருவாக்க முடியும். தரத்தை இழக்காமல் புகைப்படங்களை அனிமேஷன் செய்யலாம். இந்த சேவைகளை meta.ai இன் உதவியுடன் இணையத்திலும் பெறலாம்.

புத்திசாலித்தனமான AI உதவியாளரை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்த வேண்டும் என மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் கூறியுள்ளார்.

பயனர்கள் கற்பனை செய்த படத்திற்கு ஏற்ப உரைகளை அனுப்பினால், மெட்டா AI Assistant படத்தை உருவாக்கும். அதுமட்டுமின்றி அதனை GIF-ஆக மாற்றும் வசதியும் இருப்பதாக மெட்டா தெரிவித்துள்ளது.

Meta AI assistant அதன் பங்கிற்கு அறிவுறுத்தல்களையும் பரிந்துரைகளையும் வழங்கும் என்று கூறப்படுகிறது.

Meta AI சேவையை தங்கள் தளங்களில் பல நாடுகளுக்கு விரிவுபடுத்துவதாக மெட்டா தெரிவித்துள்ளது. இந்த அம்சம் இந்தியாவில் உள்ள சில பயனர்களுக்கும் கிடைக்கிறது.

வாட்ஸ்அப் அரட்டை மெனுவில் உள்ள Meta AI ஐகானைக் கிளிக் செய்தால், 'Meta AI Ask Anything' என்று ஒரு பாப்-அப் திறக்கும், இது வெவ்வேறு வண்ணங்களுடன் வளைந்த வடிவத்தில் இருக்கும்.

Continue என்பதைக் கிளிக் செய்தால், Meta AI உடன் திறக்கும் Chat Menu, Chat GPT போன்றே பயனரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்