Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இணையவழி கடவுச்சீட்டு முறைமை - குவியும் விண்ணப்பங்கள்

இலங்கையில் இணையவழி கடவுச்சீட்டு முறைமை - குவியும் விண்ணப்பங்கள்

16 ஆடி 2023 ஞாயிறு 11:32 | பார்வைகள் : 9929


இணையவழி கடவுச்சீட்டு முறைமை மூலம் கடந்த ஒரு மாதத்தில் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 24 ஆயிரத்து 285 பேர் சாதாரண முறைமையின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு நாள் சேவையின் மூலம் 5 ஆயிரத்து 294 பேர் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பிரதேச செயலகங்கள் மூலம் இணையத்தளத்தின் ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் வேலைத்திட்டம் கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த முறைமையினால் பத்தரமுல்லையிலுள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திலும் நீண்ட வரிசைகள் இல்லாமல் போயுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்