Paristamil Navigation Paristamil advert login

வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்திய மோதல் - பலர் காயம்

வவுனியாவில் பதற்றத்தை ஏற்படுத்திய மோதல் - பலர் காயம்

16 ஆடி 2023 ஞாயிறு 14:39 | பார்வைகள் : 7956


வவுனியாவில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றின் முன்பாக நேற்று சனிக்கிழமை இரவு இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது.

குறித்த பகுதியில் இன அடிப்படையிலான இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது அவ்வழியே பயணித்த காரொன்றும் வழிமறிக்கப்பட்டு தாக்கி சேதமாக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வவுனியா, யாழ். ஐஸ்கிறீம் வீதியில் வசிக்கும் டிலான் (வயது 25) என்ற இளைஞர் படுகாயமடைந்து, வவுனியா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அத்தோடு மேலும் 4 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் இடம்பெற்ற பட்டாணிச்சூர் பகுதிக்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கும் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் குழுவொன்று அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து, அந்த ஊடகவியலாளர்கள் அங்கிருந்த வேறு இளைஞர்களால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.  

இச்சம்பவம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்