மூடப்பட்டுள்ள A13 - ”covoiturage” பரிந்துரைக்கும் அரசு!

21 சித்திரை 2024 ஞாயிறு 07:50 | பார்வைகள் : 11120
A13 நெடுஞ்சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளதால், வீதி நெருக்கடிகளை தவிர்க்கும் முகமாக ‘மகிழுந்துகளை பகிர்ந்து பயணிக்கும்படி’ (covoiturage) அரசு பரிந்துரைத்துள்ளது.
"இந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறையிலிருந்து திரும்பியவர்கள் அல்லது இந்த திங்கட்கிழமை வேலைக்குத் திரும்புபவர்கள் அனைவரும் மகிழுந்துகளை பகிர்ந்து பயணிக்குமாறு கோரப்படுகின்றனர்!” என போக்குவரத்து துறை அமைச்சர் Patrice Vergriete அழைத்துள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை Parc des Princes அரங்கில் இடம்பெற உள்ல சாம்பியன் லீக் போட்டியினைக் காண 50,000 நுழைவுச் சீட்டுக்கள் விற்பனையாகியுள்ளதை அடுத்து, ஏராளமான ரசிகர்கள் இல் து பிரான்சின் வெளியே இருந்து வருகை தருவார்கள் எனவும், விடுமுறைக்குச் சென்றவர்களும் இன்றைய தினம் பரிசுக்கு திரும்புவார்கள் என்பதாலும் வீதி பலத்த போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1