Paristamil Navigation Paristamil advert login

மகப்பேறில் மாற்றம் தரும் புதிய சாதனம் (Odon) கண்டுபிடிப்பு அடுத்த ஆண்டு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு வரலாம்.

மகப்பேறில் மாற்றம் தரும் புதிய சாதனம் (Odon) கண்டுபிடிப்பு அடுத்த ஆண்டு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு வரலாம்.

21 சித்திரை 2024 ஞாயிறு 08:12 | பார்வைகள் : 3690


மகப்பேறின் போது சுகப்பிரசவம் ஆகவில்லை என்றால் குழந்தையை ஆயுதங்கள் கொண்டு வெளியே எடுக்கும் முறை பரவலாக உலகமெங்கும் மருத்துவமனைகளில் கையாளப்பட்டு வருகிறது, அதுவும் சாத்தியப்படவில்லை என்றால் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்கும் முறையும் இப்பொழுது நடைமுறையில் உள்ளது. 

இந்த நிலையில் அவற்றிற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல் புதிய சாதனம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
'Odon' என பெயரிடப்பட்ட சாதனம் பிளாஸ்டிக் பை போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது இதனை தாயின் பிறப்புறுப்பின் மூலம் உள்ளே செலுத்தி குழந்தையின் தலையில் கிரீடம் போல் ஒட்ட வைத்து மிகவும் சுலபமாக குழந்தையை வேளியே எடுக்க முடியும் என மகப்பேறு மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் அங்கிகாரம் பெற்ற குறித்த சாதனம் Besançon மருத்துவமனையில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. பத்து தாய்மார்களில் ஒன்பது தாய்மார்கள் எந்தவிதமான வலியும் இன்றி தங்களின் பிரசவம் நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளனர். அது மட்டுமன்றி முன்னைய சாதனங்கள் மூலம் குழந்தைகள் பிறக்கும்போது அவர்களின் தலைகளில் காயங்களோ அல்லது தழும்புகளோ ஏற்படுவதுண்டு, ஆனால் இந்த குறித்த சாதனம் எந்த விதமான தழும்புகளையோ, காயங்களையோ ஏற்படுத்தவில்லலையெனவும் தெரியவந்துள்ளது.

மருத்துவப் பேராசிரியர் Maintenant தலைமையிலான மருத்துவ குழுவினர் 'Odon' எனும் சாதனத்தை எத்தியோப்பியாவில் மீண்டும் பரிசோதிக்கவுள்ளனர் அதன் பின்னர் (ஐரோப்பிய தரநிலைகளுக்கு இணங்க) CE சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டில் இருந்து  பிரான்ஸ் மகப்பேறு மருத்துவமனைகளில் இதனை பயன்படுத்துவதற்கு சுகாதார அமைப்பு திட்டம் இட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்