Paristamil Navigation Paristamil advert login

வல்லாரைக் கீரை சட்னி

வல்லாரைக் கீரை சட்னி

21 சித்திரை 2024 ஞாயிறு 09:37 | பார்வைகள் : 1194


குழந்தைகளுக்கு சத்தானதாகவும், சுவையானதாகவும் தான் செய்து கொடுக்க நாம் விரும்புவோம். அதற்கு முக்கிய காரணம் வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமானதாக சமைத்து கொடுக்க வேண்டும் என்பதே.

எனவே குழந்தைகளுக்கு ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் வல்லாரைக் கீரை கொண்டு சத்தான சட்னி எப்படி செய்வது என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

வல்லாரைக் கீரை - 1 கட்டு

பெரிய வெங்காயம் - 1

துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்

புளி - சிறிதளவு

வரமிளகாய் - 3

பூண்டு - 5 பல்

கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்

பெங்காயத் தூள் - 1 பின்ச்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை :

எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை :

முதலில் வல்லாரைக் கீரையை நன்றாக ஆய்ந்து சுத்தம் செய்து அலசி எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் வரமிளகாய் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வறுக்கவும்.

பிறகு அதில் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் சுத்தம் செய்து வைத்துள்ள வல்லாரைக் கீரையை போட்டு நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் தேவையான அளவு புளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

வதக்கிய அனைத்தும் நன்கு ஆறியவுடன் மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கொள்ளவும்.

பிறகு அந்த தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து கலந்து விட்டால் சத்தான வல்லாரைக் கீரை சட்னி ரெடி.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்