சிறுமிகள் மீது கத்திக்குத்து - சிக்கிய குற்றவாளி மனநோயாளியா?
21 சித்திரை 2024 ஞாயிறு 12:07 | பார்வைகள் : 2539
அல்சாஸ் நகரின் சிறு நகரமான சூபிள்வையேர்ஸ்ஹைம் (SOUFFELWEYERSHEIM) நகரை உலுக்கிய சம்பவத்தின் குற்றவாளி காவற்துiறுயினரிடம் சிக்கியுள்ளான்.
7 மற்றும் 11 சிறுமிகள், அவர்களின் பாடசாலை முன்றலில் வைத்து கத்திக்குத்துத் தாக்குதலிற்கு உள்ளாகியிருந்தனர். இது பெரும் மன உளைச்சலையும் அச்சத்தினையும் மற்றைய மாணவர்களிற்கும் பெற்றோரிற்கும் ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் சிக்கிய குற்றவாளி மனநோயாளி என்பது அத்திர்சியை ஏற்படுத்தி உள்ளது. காவற்துறையினரின் அசட்டையீனமும் வைத்தியத்துறையின் அசட்டையீனமும் சிறுமிகள் மீதான தாக்குதலிற்குக் காரணமாகி உள்ளது.
1994ம் ஆண்;டு பிறந்த இவன் 2003 இன் இறுதிப் பகுதியில் மனநோய்க்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது தப்பிச் சென்று தற்கொலைக்கும் முயன்றுள்ளான்.
அதன் பின்னர் ஊரைவிட்டுச் சென்றிருந்தவன் தாக்குதலின் பின்னரே மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளான்.
மனநல வைத்தியத்தில் இருந்து தப்பி தற்கொலைக்கும் முயன்றவனைத் தெடராமல் விட்ட அரச துறைகளின் அலட்சியம் சிறுமிகளின் உயிரைக் காவு வாங்கி இருக்கும்!!