Paristamil Navigation Paristamil advert login

தாக்குதலைத் தடுத்த பிரெஞ்சு வீரனிற்கு கௌரவக்குடியுரிமை!!

தாக்குதலைத் தடுத்த பிரெஞ்சு வீரனிற்கு கௌரவக்குடியுரிமை!!

21 சித்திரை 2024 ஞாயிறு 12:50 | பார்வைகள் : 7794


அவுஸ்திரேலியா சிட்னி நகரில் கடந்த 13ம் திகதி நடந்த கத்திக்குத்துத் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். ஆனால் தொடர்ச்சியான தாக்குதலில் மேலும் பலர் கொல்லப்படாமல் இருக்க, அங்கிருந்த  ஒரு பிரெஞ்சுக் குடிமகன், தன் உயிரைப் பணயம் வைத்துத் தாக்குதலாளியின் மீது பாய்ந்து, அவனை மடக்கி உள்ளார். இந்தத் தாக்குதல் அங்கிருந்த ஒரு வணிக வளாகத்திலேயே நடந்துள்ளது.

தாக்குதலைத் தடுத்த பிரெஞ்சு வீரன் தமியோன் குவேரோ (Damien Guerot) இற்கு அவுஸ்திரேலிய மக்க்ள பெரும் நன்றியைத் தெரிவித்திருந்தனர்.

தற்போது அவுஸ்திரேலியாவின் பிரதமர், தமியோன் குவேரோவிற்கு கௌரவ அவுஸ்திரேலியக் குடியுரிமை வழங்கிக் கௌவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்