சமூக கொடுப்பனவுகளைப் பெற பிரான்சில் வசிக்கவேண்டும்! - வருகிறது சட்டம்!!
21 சித்திரை 2024 ஞாயிறு 15:13 | பார்வைகள் : 6510
சமூகநலக் கொடுப்பனவுகளை (CAF) பெறும் சிலர் மீது புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குடும்பநல தொகையினையும், முதியோருக்கான கொடுப்பனவுகளையும் பெறுபவர்கள் இதுவரை காலமும், வருடத்துக்கு ஆறு மாதங்கள் நாட்டில் இருக்கவேண்டும் எனும் சட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், வரும் 2025 ஆம் ஆண்டு முதல் அது 'ஒன்பது' மாதங்களாக அதிகரிக்கப்பட உள்ளது.
வருடம் ஒன்றுக்கு 'ஒன்பது' மாதங்கள் பிரான்சில் வசிப்பது கட்டாயமானதாகும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான அரச வர்த்தமானியில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.