Paristamil Navigation Paristamil advert login

கிட்லர் பாணியில் வணக்கம் - நகரபிதாவால் பதற்றம்!!

கிட்லர் பாணியில் வணக்கம் - நகரபிதாவால் பதற்றம்!!

21 சித்திரை 2024 ஞாயிறு 15:55 | பார்வைகள் : 3161


வில்நெவ்-சன்-ஜோர்ஜ் நகசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை வில்நெவ்-சன்-ஜோர்ஜில் நடந்த நகரசபை ஆலோசனைக் கூட்டத்தில் இருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர், வில்நெவ்-சன்-ஜோர்ஜ் நகரபிதாவான பிலிப் கோதன் (Philippe Gaudin) தீவிர வலதுசாரிகளின் ஆதரவுடன் தான் நகரபிதாவானார் என விமர்சித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நகரபிதா கிட்லர் பாணியில் கையை உயர்த்தி நாசிகளின் வணக்கத்தைத் தெரிவித்துள்ளார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பாரிய குற்றமாகும்.

ஊடகவியளாளர் ஒருவர், இச்சம்பவம் குறித்து வில்நெவ்-சன்-ஜோர்ஜ் மாநகசபை முதல்வரிடம் தொலைபேசியில் வினவியபோது, இந்தச் சம்பவத்திற்குத் தான் வருந்துவதாகவும்,  எதிர்க்கட்சியினரே இதனைத் தூண்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சியினர் இதனை உள்துறை அமைச்சரிற்குத் தெரியப்படுத்தி, மக்களைப்பற்றிக் கவலைப்படாத, நாசி வணக்கம் செய்த, இந்த மாநகரசiபையைக் கலைத்து மீண்டும் தேர்தல் வைக்குமாறு கோரியுள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்