Paristamil Navigation Paristamil advert login

ஈரானினால் ஐரோப்பாவிற்கே ஆபத்து - பிரான்சின் இராணுவ அமைச்சர்!!

ஈரானினால் ஐரோப்பாவிற்கே ஆபத்து - பிரான்சின் இராணுவ அமைச்சர்!!

21 சித்திரை 2024 ஞாயிறு 16:36 | பார்வைகள் : 4207


பிரான்சின் இராணுவ அமைச்சர் செபஸ்தியோன் லுகோர்னு (SÉBASTIEN LECORNU) ஈரானினால் பாதுகாப்புசமநிலை தவறி உள்ளதாகவும், ஈரானினால் இஸ்ரேலிற்கு மட்டுமல்ல, ஐரோப்பாவிற்கே பெரும் ஆபத்து எனத் தெரிவித்துள்ளார்.

«1979 ஆம் ஆண்டின் ஈரான் புரட்சியின் பின்னர், தங்களது வரலாற்று எதிரி எனக் கூறும் இஸ்ரேல் மீது, வரலாற்றில் இல்லாதலாறு, 350 த்ரோன்களின் மூலம் ஏவுகணைத் தாக்குதல்களை நடாத்தி உள்ளனர். இந்தத் தாக்குதல் பாதுகாப்புச் சமநிலையை உடைத்து, ஐரோப்பாவிற்கே அச்சசுறுத்தலாகவும் சவாலாகவும் ஈரான் உருவாகி உள்ளது»

«எங்களது கடல் வளமும் அச்சுறுத்தலிற்கு உள்ளாகி உள்ளது. எமது வணிகக் கப்பல்களை, யெமென்(Yémen) ஹுதிகள் தாக்கிக் கொள்ளை அடிக்கின்றனர். இந்த ஹுதிகளிற்கு ஈரான் தான்  ஆயுதம் வழங்கி ஆதரிக்கின்றது. இதனால், செங்கடலில் வணிகக் கப்பல்களிற்கு, எங்களது போர்க்கப்பல்கள் பாதுகாப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது»

«தொடர்ச்சியாக ஈரான் எங்களிற்கு அச்சுறுதலாகவே உள்ளது»

எனவும் இராணுவ அமைச்சர் தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்