இலவசமாக்கப்படுமா A14 நெடுஞ்சாலை??!

21 சித்திரை 2024 ஞாயிறு 17:07 | பார்வைகள் : 6275
A13 நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வெடிப்பினை அடுத்து, அதன் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. அதையடுத்து A14 நெடுஞ்சாலை இலவசமாக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கை வலுத்துள்ளது.
viaduct மற்றும் Saint-Cloud சுரங்கத்துக்கு இடையே ஏற்பட்ட பாரிய வெடிப்பினால், வீதி போக்குவரத்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் நிறுத்தப்பட்டுள்ளமை அறிந்ததே. வரும் வாரம் வரை இந்த தடை நீடிக்கலாம் என அறிய முடிகிறது. இந்நிலையில், Yvelines மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் Karl Olive, A14 நெடுஞ்சாலையை இலவசமாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
அதேவேளை, சற்று முன்னர், அதேபோன்ற ஒரு கோரிக்கையை இல் து பிரான்ஸ் மாகாண முதல்வர் Valérie Pécresse ம் வைத்துள்ளார்.
A13 நெடுஞ்சாலை திறக்கப்படும் வரை A14 நெடுஞ்சாலை இலவசமாக்கப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.