Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள தீர்மானம்...

 அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள தீர்மானம்...

22 சித்திரை 2024 திங்கள் 08:35 | பார்வைகள் : 5471


ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதலை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக  ஈராக்கில் உள்ள ஆயுதகுழுவொன்று தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிரியாவின் வடகிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளமொன்றின் மீது ஈராக்கின் ஜூமார் நகரிலிருந்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கார்டியன் தெரிவித்துள்ளது.

பெப்ரவரிக்கு பின்னர் முதல்தடவையாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது.பெப்ரவரி மாதத்தில் ஈராக் குழுக்கள் அமெரிக்க தளங்களின் மீது தாக்குதல்களை நிறுத்தியிருந்தன.

ஈராக்கிய பிரதமர் அமெரிக்காவிற்கு மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலளாரை சந்தித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க படையினரை ஈராக்கிலிருந்து வெளியேற்றும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படாததை தொடர்ந்து மீண்டும் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஈராக்கின் ஹெட்டாய்க் ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளை தடைசெய்யப்பட்ட அமைப்புகள் சிரியாவின் மத்தியில் உள்ள சர்வதேச கூட்டமைப்பின் தளத்தை இலக்குவைத்துள்ளன என ஈராக்கிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்