Paristamil Navigation Paristamil advert login

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பிரெஞ்சுப் பாடகர்! - உயிருக்கு போராட்டம்!!

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பிரெஞ்சுப் பாடகர்! - உயிருக்கு போராட்டம்!!

22 சித்திரை 2024 திங்கள் 08:44 | பார்வைகள் : 3451


பிரெஞ்சு பாடகர்  Kendji Girac, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். Biscarosse (Landes) நகரில் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஜொந்தாமினர் எச்சரிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதாகவும், அங்கு பாடகர் Kendji Girac துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில், மயக்கமுமுற்று கிடந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு Bordeaux நகர மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

பாடகர் Kendji Girac, இதுவரை பல்வேறு இசை அல்பங்களை வெளியிட்டுள்ளார். இறுதியா வெளியிட்ட L'école de la vie எனும் அல்பம் பெரும் வரவேற்பைப் பெற்றியிருந்தது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்