Paristamil Navigation Paristamil advert login

T20 WorldCup: அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளுக்கு Sponsor செய்யும் கர்நாடக பால் நிறுவனம்

T20 WorldCup: அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளுக்கு Sponsor செய்யும் கர்நாடக பால் நிறுவனம்

22 சித்திரை 2024 திங்கள் 09:02 | பார்வைகள் : 227


2024 T20 உலகக் கோப்பையில் இரண்டு வெளிநாட்டு அணிகளுக்கு கர்நாடகாவின் நந்தினி பால் ஸ்பான்சர் செய்ய உள்ளது.

ஜூன் 1 முதல் 29 வரை அமெரிக்கா மற்றும் மேற்கு வங்கம் இணைந்து நடத்தவுள்ள ICC T20 WorldCup-ல் அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கூட்டுறவு பால் நிறுவனமான Karnataka Milk Federation (KMF) Sponsor செய்வதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

KMF கிரிக்கெட் அணிகளுக்கு ஸ்பான்சர் செய்வது இதுவே முதல் முறை.

KMF-ன் நிர்வாக இயக்குநர் எம்.கே.ஜெகதீஷ், தேசிய ஊடகம் ஒன்றில் இந்த Sponcership குறித்து உறுதி செய்தார்.

ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து வீரர்கள் தங்கள் ஜெர்சியின் ஸ்லீவ் ((Jersey Sleeve) மீது KMF லோகோவை வைத்திருப்பார்கள்.

எடுத்துக்காட்டாக, வலது கை வீரர்களுக்கு இடது கை, இடது கை வீரர்களுக்கு வலது கையிலும் KMF Logo காணப்படும்.

இந்த இரு அணிகளின் வீரர்களும் நந்தினி தயாரிப்புகளின் விளம்பரம், சமூக ஊடகங்களில் பிரச்சாரம் மற்றும் போட்டோஷூட்களில் பங்கேற்பார்கள்.

உலகக் கோப்பை போட்டியின் போது இந்த விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும். இது இந்தியாவின் கர்நாடக மாநில மக்கள் அனைவருக்கும் பெருமை சேர்க்கும்.

உலகக் கோப்பையின் போது, ​​KMF-இன் தயாரிப்புகள் அமெரிக்காவில் கிடைக்கும், மேலும் இந்த கர்நாடக பிராண்ட் உலக அங்கீகாரத்தைப் பெறுவதை நோக்கமாக கொண்டு இதனை செய்வதாக எம்.கே.ஜெகதீஷ் கூறினார்.

கடந்த Pro Kabaddi League தொடரில் Bengaluru Bulls அணிக்கு KMF ஸ்பான்சர் செய்தது.

தற்போது நடைபெற்று வரும் 2024 IPL தொடரில் RCB அணியின் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சித்த போதிலும், அந்த அணி நிர்ணயித்த விலை உயர்ந்த தொகையை செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக ஜெகதீஷ் பகிர்ந்துள்ளார்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்