Paristamil Navigation Paristamil advert login

ஆப்கானிஸ்தானில் மரண அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சிறார்கள்

 ஆப்கானிஸ்தானில் மரண அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சிறார்கள்

16 ஆவணி 2023 புதன் 08:28 | பார்வைகள் : 14561


ஆப்கானிஸ்தானில் குழந்தைகள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு முக்கால்வாசிக்கும் அதிகமானோர் குறைவான உணவையே உட்கொண்டு வந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அதுவரை ஆப்கானிஸ்தானுக்கு நிதியுதவியும் பொருளுதவியும் அளித்துவந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கைவிட்டுள்ளமையால், ஏழ்மையும் பட்டினியும் பல மடங்கு அதிகரித்து வருகிறது.

பசியை போக்க சிறார்கள் ஆபத்தான வேலைகளில் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

குடும்ப சூழல் காரணமாக மூன்றில் ஒரு பகுதி சிறார்கள் கட்டாய வேலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தொண்டு நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில், எல்லை தாண்டிய வழியாக பொருட்களை கடத்திச் சென்ற சிறுமி ஒருவர் லொறியில் சிக்கி மரணமடைந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

அரிசி மட்டுமே வாங்க முடியும் என்ற நிலையில், தாயார் ஒருவர் தமது இரட்டையர்களான 8 மாத குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் சிறார்கள் பட்டினி மற்றும் ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் மரண அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்.

குடும்பங்கள் அசாதாரண சூழலை எதிர்கொள்வதாகவும் தொண்டு நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள நிதியில், இந்த ஆண்டு பாதிக்கு மேல் குறைக்க பிரித்தானியா முடிவு செய்துள்ளது அந்த நாட்டு மக்களின் கனவு மற்றும் நம்பிக்கை மீது விழுந்த பேரிடி எனவும் அந்த தொண்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்