வவுனியாவில் வைத்தியசாலையில் கர்ப்பிணி தாயும், சிசுவும் பலி

22 சித்திரை 2024 திங்கள் 17:01 | பார்வைகள் : 6283
வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது,வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது.
இன்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணித்தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் இன்றையதினம் விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்ற நிலையில் தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அவர் மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்டுள்ளனர். எனினும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக அறிவதற்காக வவுனியா வைத்தியசாலை பணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் அது பலனளிக்கவில்லை.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1