Paristamil Navigation Paristamil advert login

 கனமழை வெள்ளத்தில் மூழ்கிய சீனா- 4 பேர் பலி

 கனமழை வெள்ளத்தில் மூழ்கிய சீனா- 4 பேர் பலி

24 சித்திரை 2024 புதன் 07:06 | பார்வைகள் : 2515


தெற்கு சீனாவில் குவாங்டாங் மாகாணத்தின் தலைநகரான குவாங்சூவில் 60.9 செ.மீ மழை பெய்து வரவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குவாங்டாங்கில் உள்ள ஷென்சென் மெகாசிட்டியின் சில பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் 'ரெட் அலர்ட்' மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

இப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் திடீர் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர் மழையால் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள 2 நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் ரப்பர் படகுகளில் மீட்கப்பட்டு வருகின்றனர். 

நூற்றுக்கணக்கான கடை வீதிகள், குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தில் மூழ்கின. 

 ஷாகிங் நகரில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன்,

மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 459 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

வெள்ளத்தால் 1,500 ஹெக்டேர் விளை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள நீர் நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. 

சில கிராமங்களில் நெல் மற்றும் உருளைக்கிழங்கு வயல்கள் மூழ்கியதோடு பல இடங்களில் 2வது மாடி வீடுகள் வரை மழை நீர் சூழ்ந்துள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரப்பர் படகு மூலம் சென்று உணவு வழங்கப்படுகிறது.

மழை பாதிப்பால் ஏராளமான மக்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

புவி வெப்பமடைதல் காரணமாக சீனாவில் வானிலை நிகழ்வுகள் மிகவும் தீவிரமானதாகவும் கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறி உள்ளனர். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்