வாழைப்பழ அல்வா..
24 சித்திரை 2024 புதன் 06:04 | பார்வைகள் : 912
குழந்தைகளுக்கு பிடித்த சுவையான வாழைப்பழ அல்வாவை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எப்படி செய்யலாம் என்று தான். இதில் நாட்டு சர்க்கரை சேர்த்து செய்வதால் குழந்தைகள் உடலுக்கு இது மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும். வாங்க எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
வாழைப்பழம் - 7
நாட்டு சர்க்கரை - 1 கப்
முந்திரி - 10
பாதாம் - 10
பிஸ்தா - 10
கான் பிளவர் மாவு - 2 ஸ்பூன்
நெய் - 5 ஸ்பூன்
தண்ணீர் - தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் வாழைப்பழத்தின் தோலை உரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
பின்னர் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக மென்மையாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
தற்போது அடுப்பில் நான்ஸ்ட்டிக் கடாய் ஒன்றை வைத்து நெய் ஊற்றி உருகியதும் முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அதே கடாயில் மீண்டும் நெய் விட்டு சூடானதும் அதில் அரைத்து வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து கிளறி விட்டுக்கொள்ளுங்கள்.
தற்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து வாழைப்பழ கலவையை 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஓரளவிற்கு கெட்டியாகும் வரை கைவிடாமல் நன்றாக கிளறி விட்டுக்கொண்டே இருங்கள்.
பின்னர் அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும்.
தற்போது ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் கான் பிளவர் மாவை போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
பின்பு அதை வாழைப்பழ அல்வாவில் சேர்த்து கைவிடாமல் கலந்துவிட்டுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் அல்வா கட்டிபிடித்துவிடும்.
இறுதியாக வாழைப்பழ அல்வாவில் வறுத்த முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வாழைப்பழ அல்வா சுட சுட சாப்பிட ரெடி.