பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற 5 பேர் பலி!
24 சித்திரை 2024 புதன் 07:12 | பார்வைகள் : 2761
சமீபகாலமாக ஐரோப்பிய நாட்டுக்குள் சட்ட விரைாதமாக மக்கள் கடல் மார்க்கம் வழியாக நுழைவதற்கு முயற்சி செய்துவருவுதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேறும் முனைப்பில் படகில் இங்கிலிஷ் கால்வாயைக் கடக்க முயன்றவர்களில் 5 பேர் உயிரிழந்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களைத் தடுக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இச்சம்பவம் நடந்து கவனம் பெற்றுள்ளது.
படகு கவிழ்ந்து 5 பேர் இறந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு பிரான்ஸின் வடக்கே உள்ள மிகப் பிரபலமான போலோன் மீன்பிடி துறைமுகம் பகுதிக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக குடியேற்ற தடுப்புச் சட்டத்தை நிறைவேற்ற பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் அதீத பிடிவாதம் காட்டிவந்த நிலையில், இது மனிதத் தன்மையற்ற கொடூரமான சட்டம் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
2024-ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து முதல் 3 மாதங்களில் மட்டும் 5,000 பேர் சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ளனர்.
இதேவேளை கடந்த 2023-ல் சட்டவிரோதமாக நுழைந்தவர்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் முதல் 5 இடங்களில் உள்ளனர்.