இந்தியாவை மாற்றியவர் மோடி: அமெரிக்க சி.இ.ஓ., புகழாரம்
25 சித்திரை 2024 வியாழன் 02:53 | பார்வைகள் : 1625
பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் நம்பமுடியாத பணிகளை செய்துள்ளார். அதில் கொஞ்சமாவது, அமெரிக்காவில் நாம் செய்வது அவசியம்,'' என, அமெரிக்காவின் ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், பொருளாதார மன்றத்தால் நேற்று முன்தினம் (ஏப்., 23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், ஜே.பி.மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் பேசியதாவது:
இந்தியாவில் நம்பமுடியாத கல்வி முறையையும், அடிப்படை கட்டமைப்பையும், பிரதமர் மோடி தந்திருப்பது நம்பமுடியாத பணி. அதில் சிறிதாவது, அமெரிக்காவில் நாம் செய்யவேண்டிய தேவை உள்ளது. 40 கோடி மக்களை அவர் வறுமையில் இருந்து மீட்டுள்ளார்.
நாம் மோடியைப் பற்றி நிறைய பேசலாம். 40 கோடி மக்கள் கழிவறை வசதி பெற்றுள்ளனர். இவையெல்லாம் எப்படி நிகழ்ந்தன என்பது பற்றி நாம் விரிவாக பேசவேண்டும்.
இந்தியாவில், 70 கோடி மக்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கியுள்ளனர். இதன் வாயிலாக பணப்பரிவர்த்தனைகள் நடக்கின்றன.
ஒரு மனிதரின் உறுதி காரணமாக, ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்றியுள்ளனர். பழமையான அதிகார வர்க்க நடைமுறைகளை உடைத்த மோடி உறுதி படைத்தவர். அவர் செய்தவற்றில், சிலவற்றை அமெரிக்காவில் நாம் செய்வது அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.