Paristamil Navigation Paristamil advert login

சிறுவர்களுக்கு ஊரடங்கு! - உள்துறை அமைச்சர் வரவேற்பு!

சிறுவர்களுக்கு ஊரடங்கு! - உள்துறை அமைச்சர் வரவேற்பு!

26 சித்திரை 2024 வெள்ளி 13:40 | பார்வைகள் : 4390


பிரான்சில் சில நகரங்களில் சிறுவர்களுக்கு இரவு நேர ஊடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடங்கினை உள்துறை அமைச்சர் Gérald Darmanin வரவேற்றுள்ளார். 

பிரான்சின் கடல்கடந்த நிர்வாகப்பிரிவான Guadeloupe தீவில் கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளை அடுத்து, அங்கு இரவுநேர ஊடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இரவு 8 மணியில் இருந்து காலை 5 மணிவரை அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்ற ஒரு ஊரடங்கு பிரான்சின் பிரதான நிலப்பரப்பிலும் சில நகரங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

நீஸ் நகரின் சில பகுதிகளிலும், Louis Nègre (Cagnes-sur-Mer) நகரிலும் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஊரடங்கிற்கு உள்துறை அமைச்சர் Gérald Darmanin ஆதரவு கரம் நீட்டியுள்ளார். "எங்களது பிள்ளைகள் அதிகாலை 2 மணிக்கும், 3 மணிக்கும் வீதிகளில் நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நிற்பதற்குரிய காரணமும் தேவையில்லை!" என அமைச்சர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்