சீனாவுடன் நட்பை நீடிக்க விரும்பும் அமெரிக்காவும் மற்றும் ரஷ்யாவும்
26 சித்திரை 2024 வெள்ளி 13:51 | பார்வைகள் : 1920
உக்ரைன் ரஷ்ய போர் ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாகவே நிற்க, அல்லது, வேறு வகையில் கூறினால், ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்கு கண்டனம் தெரிவிக்காமலே இருக்கின்றது.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவோ, கடந்த சில மாதங்களாக சீனாவுடன் நட்பு பாராட்ட விளைவதைக் கவனிக்கமுடிகிறது.
அமெரிக்காவின் அரசுத்துறைச் செயலரான ஆண்டனி ப்ளிங்கன் சீனா சென்றுள்ள நிலையில், அவர் சீன வெளியுறவுத்துறை அமைச்சரான Wang Yi மற்றும் பொது பாதுகாப்புத்துறை அமைச்சரான Wang Xiaohongஐயும் சந்தித்து பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.
அதைத் தொடர்ந்து அவர் சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங்கை சந்தித்தார்.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவும் வேறுபாடுகளை பொறுப்புடன் நிர்வகிப்பதன் அவசியம் தொடர்பில் சீன தலைவர்களுடன் ஆண்டனி ப்ளிங்கன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின், தான், அடுத்த மாதம், அதாவது மே மாதம் சீனா செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
என்றாலும், அவர் என்ன திகதியில் சீனா செல்கிறார் என்பது போன்ற விவரங்கள் வெளியாகவில்லை.