AI தொழில்நுட்பத்தால் கால் சென்டர் வேலைகளுக்கு அச்சுறுத்தல் - TCS CEO எச்சரிக்கை
26 சித்திரை 2024 வெள்ளி 14:36 | பார்வைகள் : 1277
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுடபத்தின் வளர்ச்சியால் கால் சென்டர் துறையில் மிகப்பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்று TCS CEO கிருத்திவாசன் கூறினார்.
AI காரணமாக பாரம்பரிய கால் சென்டர்களின் தேவை கணிசமாகக் குறையும் என்று அவர் கூறுகிறார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், புதிய தொழில்நுட்பத்துடன் ஆசியா உள்ளிட்ட பல இடங்களில் வாடிக்கையாளர் சேவை நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பல விவரங்களை கிருத்திவாசன் தெரிவித்தார்.
AI ஆனது வாடிக்கையாளர் சேவைத் துறையில் பெரும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்பது தெளிவாகிறது.
AI கால் சென்டர்கள் எதிர்காலத்தில் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் கேள்விகளை எதிர்நோக்கி தீர்க்கும் திறன் கொண்ட AI அமைப்புகளால் இவை ஆக்கிரமிக்கப்படும்.
வாடிக்கையாளர் பிரச்னைகளை கண்டறிந்து, அது தொடர்பான அழைப்பை முன்கூட்டியே தீர்க்கும் தொழில்நுட்ப படிநிலையை பார்க்க உள்ளோம் என்று கிருத்திவாசன் கூறியுள்ளார்.
ஒரு வருடத்திற்குள் இது சாத்தியமாகும் என்று அவர் நம்புகிறார்.
Generative AI-ன் உடனடி நன்மைகளைப் பற்றி நாம் மிகவும் உற்சாகமடையக்கூடாது என்றார். எல்லோரும் இப்போது AI பற்றி பேசுகிறார்கள்.
ஆனால் அதன் உண்மையான தாக்கத்தை அறிந்துகொள்ள காலம் எடுக்கும், பழைய வேலைகளை மாற்றுவது மட்டுமல்லாமல், சமீபத்திய தொழில்நுட்பத்துடன் புதிய வாய்ப்புகளை AI உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
AI-ன் வளர்ச்சியுடன், திறமையான நிபுணர்களின் தேவை ஏற்படும் என்றும், சமீபத்திய தொழில்நுட்பத்துடன் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.