சலார் 2ம் பாகத்தில் இணையும் பிரபல பாலிவுட் நடிகை?

26 சித்திரை 2024 வெள்ளி 15:03 | பார்வைகள் : 7535
பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து கடந்த ஆண்டில் வெளிவந்த படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி, பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாக பெரிதளவில் பேசப்படவில்லை என்றாலும் வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் சலார் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இதில் ஹிந்தி நடிகை கியாரா அத்வானி இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் படத்தில் நாயகி இல்லை என்றாலும் ஒரு முக்கியமான ரோலில் சிறப்பு வேடத்திலும், ஒரு பாடலுக்கும் நடனம் ஆட போவதாக சொல்கிறார்கள். ஏற்கனவே தெலுங்கில் பரத் அனி நேனு உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது ஷங்கரின் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1