விசேட செய்தி : ஒன்பது மெற்றோ சேவைகள் நிறுத்தம்!!

26 சித்திரை 2024 வெள்ளி 15:39 | பார்வைகள் : 8654
இன்று ஏப்ரல் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் பரிசில் மெற்றோ சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது.
மொத்தமாக ஒன்பது வழிச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக RATP தனது X சமூகவலைத்தளத்தில் அறிவித்துள்ளது. 'பாதுகாப்பு காரணங்களுக்காக!' என மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பரிஸ் காவல்துறையினர் வழங்கிய அறிவுறுத்தலின் பேரின் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக பல்வேறு போக்குவரத்து மாறுதல்கள் இடம்பெற உள்ளன. அதற்குரிய பரீட்சாத்த நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாக அறிய முடிகிறது.