Paristamil Navigation Paristamil advert login

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?

29 பங்குனி 2024 வெள்ளி 11:01 | பார்வைகள் : 4480


தனுஷின் அடுத்த திரைப்படத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் தனுஷ் ஒரு பக்கம் நடிகராக பிசியாக இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்பதும் தனுஷின் ஐம்பதாவது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி முடித்து விட்டு, தற்போது ’நிலவுக்கு என் மேல் என்னடி காதல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனுஷின் உறவினர் ஹீரோவாகவும், அனிகா சுரேந்திரன் நாயகியாகவும் நடிக்கும் இந்த படம் ஒரு இளம் காதலர்களின் வித்தியாசமான கதையம்சம் கொண்டது என்று தெரிகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்திற்காக நான்கு பாடல்களை அவர் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் தனுஷ் தான் நான்கு பாடல்களை எழுதி உள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் அனைத்து பாடல்களும் சிறப்பாக வந்திருப்பதாகவும் எந்த பாடலை முதலில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலாக ரிலீஸ் செய்வது என்பதில் எங்களுக்கே குழப்பம் இருக்கிறது என்றும் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குனர் தனுஷ் உடன் பாடல் கம்போஸிங் செய்ய உட்கார்ந்தால் ஐந்து அல்லது பத்து நிமிடத்தில் பாடல் கம்போசிங் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே ஒரு நல்ல புரிதல் இருந்தது என்றும் ஜி.வி பிரகாஷ் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் உள்ள ஒரு பாடலில் தான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் ஜிவி பிரகாஷ் கூறியிருப்பதை அடுத்து இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்