Yvelines : ஆற்றில் இருந்து சடலம் மீட்பு!!

29 பங்குனி 2024 வெள்ளி 14:19 | பார்வைகள் : 8919
Chatou (Yvelines) நகர ஆற்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மார்ச் 28 ஆம் திகதி நேற்று வியாழக்கிழமை இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் கடற்படையினரின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. வயதும் கண்டறியப்படவில்லை.
விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.