கொழும்பில் 500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு 4 வருட சிறை
29 பங்குனி 2024 வெள்ளி 15:50 | பார்வைகள் : 2412
முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிறைத்தண்டனை விதித்துள்ளது.
போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக, முச்சக்கரவண்டி சாரதி ஒருவரிடம் 500 ரூபாவை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய பொலிஸ் சார்ஜன்ட் குற்றவாளியாக நீதிமன்றால் காணப்பட்டார்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அவருக்கு எதிராக 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து இருந்தது.
4 குற்றச்சாட்டுக்களிலும் பொலிஸ் சார்ஜன்ட குற்றவாளியாக கண்ட மன்று , ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை சமகாலத்தில் அனுபவிக்க மன்று அனுமதித்தது.