Paristamil Navigation Paristamil advert login

விக்கெட்டில் சதம் விளாசி சாதனைப் படைத்த ஆந்த்ரே ரசல்!

விக்கெட்டில் சதம் விளாசி சாதனைப் படைத்த ஆந்த்ரே ரசல்!

30 பங்குனி 2024 சனி 11:44 | பார்வைகள் : 1587


கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி வீரர் ஆந்த்ரே ரசல் 100 ஐபிஎல் விக்கெட்டுகளை கைப்பற்றி மிரட்டியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய KKR அணி வீரர் ஆந்த்ரே ரசல் (Andre Russell) 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 100 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை ரசல் எட்டினார். 

அத்துடன் ஐபிஎல் தொடர் வரலாற்றில், 100 விக்கெட் மற்றும் 1000 ஓட்டங்கள் எடுத்த வீரர் எனும் சாதனையையும் ரசல் படைத்தார்.

இப்பட்டியலில் இந்திய ஆல்ரவுண்டர் வீரர் ரவீந்திர ஜடேஜா 152 விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

சாதனை வீரர்களின் பட்டியல்
ரவீந்திர ஜடேஜா (152) - 2724 ஓட்டங்கள்
ஆந்த்ரே ரசல் (100) - 2326 ஓட்டங்கள்
டிவைன் பிராவோ (183) - 1560 ஓட்டங்கள்
அக்சர் பட்டேல் (113) - 1454 ஓட்டங்கள்
சுனில் நரைன் (165) - 1048 ஓட்டங்கள்           
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்