வேலை தேடுவோருக்கான கொடுப்பனவுகளை குறைப்பதற்கு மக்களிடையே அமோக ஆதரவு!
31 பங்குனி 2024 ஞாயிறு 16:40 | பார்வைகள் : 6590
வேலை தேடுவோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை (indemnités chômage.) குறைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதனை பெரும்பான்மையான மக்கள் வரவேற்றுள்ளனர்.
வேலை தேடுவோருக்கான கொடுப்பனவு காலம் 24 மாதங்களில் இருந்து 18 மாதங்களாக குறைக்கப்பட்ட நிலையில், மிக விரைவில் அதனை 12 மாதங்களாக குறைக்க அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு தொழிற்சங்கள், எதிர்க்கட்சிகள் என எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பொது மக்களில் இரண்டில் ஒருவருக்கும் அதிகமானோர் (54% சதவீதமானோர்) இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவர்களில், சிலர் (5% சதவீதமானவர்கள்) கொடுப்பனவுகளின் தொகையை குறைக்க வேண்டும் எனவும், பலர் (25% சதவீதமானவர்கள்) கொடுப்பனவுகள் வழங்கப்படும் காலத்தை குறைக்கவேண்டும் எனவும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.
24% சதவீதமானவர்கள் இரண்டையும் குறைக்கவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.
46% சதவீதமானவர்கள் ‘கொடுப்பனவுகளை குறைக்கக்கூடாது’ என தெரிவித்துள்ளனர்.
l’Institut CSA நிறுவனம் மேற்கொண்டிருந்த கருத்துக்கணிப்பில் இது தெரியவந்துள்ளது. கருத்துக்கணிப்பு மார்ச் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 18 வயது நிரம்பிய 1,011 பேர் இதில் பங்கேற்றிருந்தனர்.