Paristamil Navigation Paristamil advert login

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்..

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்..

1 சித்திரை 2024 திங்கள் 06:21 | பார்வைகள் : 5671


தமிழ் திரையுலகில் கதாநாயகியாக கடந்த 90களில் இருந்த சரண்யா பொன்வண்ணன் தற்போது முன்னணி நடிகர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் இவர் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன் தனது குடும்பத்துடன் விருகம்பாக்கத்தில் வாழ்ந்து வரும் நிலையில் அவருக்கும் அவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் பார்க்கிங் பிரச்சினையில் சண்டை வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த பிரச்சனையின் போது பக்கத்து வீட்டு பெண்ணான ஸ்ரீதேவி என்பவருக்கு சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுவதாக கூறப்படும் நிலையில் இது குறித்து ஸ்ரீதேவி என்ற அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் இந்த புகாரில் அவர் சிசிடிவி காட்சிகளையும் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இது குறித்து விசாரணை செய்து வருவதாகவும் விரைவில் சரண்யா பொன்வண்ணனிடம் அவர்கள் விசாரிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்