▶ LIDL விற்பனையான கோழி இறைச்சியில் உயிர்கொல்லி! - மீளப்பெறப்படுகிறது - அவதானம்!!
2 சித்திரை 2024 செவ்வாய் 07:26 | பார்வைகள் : 7390
LIDL நிலையங்களில் கடந்தவாரத்தில் விற்பனை செய்யப்பட்ட கோழி இறைச்சியில் உயிர்கொல்லி பக்டீரியா இருப்பதாக எச்சரிக்கப்பட்டு, அவை மீளப்பெறப்பட்டு வருகிறது.
கோழி இறைச்சி கால்கள் பொதிசெய்யப்பட்ட ‘Label Rouge' வகை 550 கிராம் எடையுள்ள பெட்டிகளே மீளப்பெறப்படுகின்றன. அவற்றில் லிஸ்டீரியா எனப்படும் பக்டீரியா (listeria) கலந்துள்ளதாகவும், அவை உணவுக்கு பயன்படுத்த ஏதுவானது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக மூன்று தொகுதிகளாக விநியோகிக்கப்பட்ட அல்லது விற்பனை செய்யப்பட்ட இறைச்சிகள் மீளப்பெறப்படுகின்றன.
மேற்படி விநியோக தொகுதிகளை கொண்ட இறைச்சிகளை வாங்கியவர்கள் அதனை பயன்படுத்த வேண்டாம் எனவும், அதனை அழித்துவிடும் படியும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை விடுக்கப்பட்டுள்ளது. ஏதேனும் சந்தேகம் இருந்தால் 0800.90.03.43. எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.