Paristamil Navigation Paristamil advert login

Rambouillet : துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் - ஆணின் சடலம் மீட்பு!!

Rambouillet : துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் - ஆணின் சடலம் மீட்பு!!

3 சித்திரை 2024 புதன் 09:15 | பார்வைகள் : 8268


52 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.

ஏப்ரல் 1 ஆம் திகதி திங்கட்கிழமை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, Rambouillet (Yvelines)  நகரில் உள்ள வீடொன்றுக்கு அவர்கள் விரைந்து சென்றனர். அங்கு இரத்தவெள்ளத்தில் சடலம் ஒன்று கிடப்பதை பார்த்துள்ளனர். அருகே அவரது தந்தையும் இருந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக மகன் தொடர்பில் எந்த தொடர்பும் செய்தியும் கிடைக்கவில்லை என்பதால், மகனை பார்ப்பதற்காக அவர் வருகை தந்த நிலையிலேயே மகன் கொல்லப்பட்டுள்ளதை அறிந்துள்ளார். அதன் பின்னரே அவர் காவல்துறையினரை அழைத்துள்ளார்.

காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். கொல்லப்பட்ட நபர் மீது பல குற்றச்செயல்கள் வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்