மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பாரா சமந்தா... ?
7 சித்திரை 2024 ஞாயிறு 09:53 | பார்வைகள் : 2053
மயோசிடிஸ் நோய் பாதிப்புக் காரணமாக நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாகவே சினிமாவில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறார். இப்போது சினிமாவில் கம்பேக் கொடுக்க அவர் தயாராகி வரும் நிலையில், பெரிய வாய்ப்பு அவர் கதவைத் தட்டுகிறது. ஆனால், அதை ஒத்துக்கொள்ளத் தயக்க காட்டுகிறார் சமந்தா.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே அதை விட்டு விலகுவதற்கும் பிரேக் எடுக்கவும் வலுவான காரணங்கள் இருக்க வேண்டும். அப்படியான ஒரு காரணமாக சமந்தாவுக்கு உடல்நல பிரச்சினைகள் இருந்தது. நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப் பின்னர், சமந்தாவுக்கு சினிமா கிராஃப் நன்றாகவே வளர்ந்தது. அதன் பிறகு அவருக்கு மயோசிடிஸ் உடல்நல பாதிப்பு விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. ஒருகட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் சினிமாவில் இருந்து சில மாதங்கள் பிரேக் எடுக்கப் போவதாக அறிவித்தார் சமந்தா.
அதன்பிறகும் ஆன்மிக சுற்றுலா, பிராண்ட் புரோமோஷன், உடல்நலன் குறித்தான பாட்காஸ்ட் ஆரம்பித்தது என தொடர்ந்து தனது ரசிகர்களுடன் கனெக்டிலேயே உள்ளார். சீக்கிரம் சினிமாவில் கம்பேக் கொடுக்கிறேன் என்று சொன்னவர், பிரேக் எடுக்க வேண்டும் என்று தான் எடுத்த இந்த முடிவு சரியானது என்றும் சொன்னார்.
இப்போது அட்லி- அல்லு அர்ஜூன் சேரும் புதிய படத்தில் நடிகை சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைக்க அட்லி அணுகி இருக்கிறார். ஏற்கனவே, ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடன் ஜோடி சேர நயன்தாராவுக்கு முன்னரே சமந்தாவைதான் அணுகினார் அட்லி. ஆனால், அப்போது உடல்நல பிரச்சினைகள் காரணமாக அந்த வாய்ப்பை மறுத்தார் சமந்தா. ஜாக்பாட் வாய்ப்பை மிஸ் செய்தவருக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருக்கிறார் அட்லி.
அல்லு அர்ஜூனுடன் நல்ல நட்பில் இருக்கும் சமந்தாவுக்கு ‘புஷ்பா’ படத்தில் ‘ஊ சொல்றியா...’ பாடலில் ஆட வைத்து பெயர் வாங்கிக் கொடுத்தார் அல்லு அர்ஜூன். இப்படி சமந்தாவின் சினிமா கரியரில் முக்கிய நபர்களான அட்லி- அல்லு அர்ஜுனின் படத்திற்கு அழைப்பு வரும் வேளையில் அதை ஒத்துக் கொள்ளாமல் தயக்கம் காட்டுகிறாராம் சமந்தா.
’யசோதா’, ‘சாகுந்தலம்’, ‘குஷி’ என அடுத்தடுத்து வணிக ரீதியாக சுமாரான படங்களையே கொடுத்தார் சமந்தா. இதனால், அவர் சினிமாவில் கம்பேக் கொடுக்க நினைக்கும் சூழலில் அட்லி- அல்லு அர்ஜூன் படத்தில் கதாநாயகியாக நடிப்பதே இழந்த மார்கெட்டை மீண்டும் பிடிக்க புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் என்கின்றனராம் அவரது நெருங்கிய வட்டாரத்தினர்.
சமந்தாவோடு, த்ரிஷா உள்ளிட்ட சில நாயகிகளும் பரிசீலனைப் பட்டியலில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.