Paristamil Navigation Paristamil advert login

ருவாண்டா படுகொலை நினைவு நாள்! - ஈஃபிள் கோபுரத்தில் அஞ்சலி!!

ருவாண்டா படுகொலை நினைவு நாள்! - ஈஃபிள் கோபுரத்தில் அஞ்சலி!!

7 சித்திரை 2024 ஞாயிறு 16:27 | பார்வைகள் : 3465


ருவாண்டா படுகொலைகள் இடம்பெற்று 30 ஆம் ஆண்டுகள் நினைவாக இன்று ஈஃபிள் கோபுரத்தில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

ஈஃபிள் கோபுரத்தின் மின் விளக்குகள் ஒரு நிமிடம் அணைக்கப்பட்டு அதன் முதலாவது தளத்தில் ‘Kwibuka’ எனும் வார்த்தைகள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. Kwibuka என்றால் ‘நினைவில் கொள்வது’ என அர்த்தமாகும்.

ருவாண்டா இனப்படுகொலை 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கறுப்பு பக்கங்களாகும். 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் ஜூலை 14 ஆம் திகதி வரை இடம்பெற்ற இனப்படுகொலையில் 800,000 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அவர்களில் 300,000 இல் இருந்து 500,000 வரையான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

ருவாண்டாவில் வாழ்ந்த ஆயுதம் தாங்கிய Hutu இனக்குழு, Tutsi இனக்குழுவினரை மிக கொடூரமாக கொன்றொழித்தது. முதலாவது படுகொலை ஏப்ரல் 7 ஆம் திகதி ஆரம்பமானது.

அதன் நினைவாகவே இன்று இரவு 8.30 மணிக்கு ஈஃபிள் கோபுரத்தில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்