Paristamil Navigation Paristamil advert login

தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பாஜ., விடம் இருந்து விலகினோம் : இ.பி.எஸ்.,

தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பாஜ., விடம் இருந்து விலகினோம் : இ.பி.எஸ்.,

7 சித்திரை 2024 ஞாயிறு 16:41 | பார்வைகள் : 1259


தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பாஜ., கூட்டணியில் இருந்து விலகினோம் என திருவள்ளூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக பொது செயலாளர் இ.பி.எஸ் கூறினார்.

திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அரசு மருத்துவக்கல்லூரி அருகே நடைபெற்ற பிரசார பொதுகூட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.

அவர் பேசியதாவது:சாதனைகளை சொல்லி வாக்குகேட்காமல் என்னையும் அதிமுகவையும் திட்டி வாக்கு கேட்கிறார் ஸ்டாலின் என்னென்ன சாதனைகளை செய்தோம் என்று கூறி வாக்கு கேட்காமல் என்னையே குற்றம் கூறி வருகிறார். என்னைப்பற்றி பேசி மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப்போகிறது?

பொய் பேசுவதற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றால் ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்.ஸ்டாலின் அழகாக பேசுகிறார், உதய் அருமையாக பேசுகிறார், நிறைய திட்டங்களை கூறுகிறார்கள் என்று நம்பித்தான் உங்களுக்கு ஓட்டுப் போட்டனர்.விஞ்ஞான உலகத்தில் உங்கள் பொய் எல்லாம் எடுபடாது.கருணாநிதி ஆட்சியில் கோவையில் விவசாயிகள் மீது குருவியை சுடுவது போல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. விவசாயிகளுக்கு நிவாரண தொகையை வழங்கியவர் ஜெயலலிதா. தேசிய கட்சிகளால் எந்த நன்மையும் இல்லை. பா.ஜ.,காங்கிரஸ் மாறி மாறி ஆட்சிக்கு வரும் போது மாநில தேவைகளை புறக்கணிக்கிறது.
இரட்டை வேடம் போடும் கட்சி தான் திமுக. நாமக்கல் திமுகவை சேர்ந்த காந்தி செல்வன் மத்திய சுகாதாரதுறை அமைச்சராக இருந்த போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வைகொண்டு வந்த காங்.,கும் திமுகவும் தற்போது நீட் தேர்வு நடத்தப்படாது என்கின்றனர்.

மத்தியில் காங்கிரஸ் உடன் 14 ஆண்டுகள் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது. மத்தியிலும் மாநிலத்திலும் கொள்ளையடிப்பதற்காக ஏதுவாகத்தான் இண்டியா கூட்டணியில் இருக்கிறார் அதிமுகவின் தாலிக்கு தங்கம் திட்டம், திருமண உதவி திட்டம் அம்மா இரு சக்கரவாகனம் திட்டத்தை திமுக நிறுத்தி விட்டது. 100 வேலை வாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளை கசக்கி பிழிகின்றனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளதால் தொழில் வளர்ச்சியில் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் திட்டம் போட்டு பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.

திமுக கூட்டணியில் உள்ள 38 எம்.பிக்கள் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் போது கடுமையாக எதிர்க்கும் கட்சி அதிமுக தான் எவ்வளவு நாட்களுக்கு தான் திமுக பொய் சொல்லப்போகிறது திமுக அறிவித்த 520 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை.இவ்வாறு இ.பி.எஸ் பேசினார். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்