Paristamil Navigation Paristamil advert login

ஆறு மாதங்களில் 7,177 பேர் கைது!

ஆறு மாதங்களில் 7,177 பேர் கைது!

7 சித்திரை 2024 ஞாயிறு 17:02 | பார்வைகள் : 3832


போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை ஒன்றை மக்ரோனின் அரசு ஆரம்பித்து மிகவும் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது. ”OPÉRATIONS PLACE NETTE” என பெயரிடப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் இதுவரை 7,177 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஏப்ரல்7, ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவிக்கையில், “இந்த நடவடிக்கை பெரு வெற்றி ஒன்றை பரிசளித்துள்ளது. 11 மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள குற்றவாளிகளின் சொத்துக்களை (ஆயுதங்கள், வாகனங்கள், வீடுகள்) பறிமுதல் செய்துள்ளோம். இந்த ஆறு மாத காலத்தில் 7,177 பேரினை கைது செய்துள்ளோம். காவல்துறையினர் சிறப்பாக செயற்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடரும்!” என தெரிவித்தார்.

இதுவரை 400 OPÉRATIONS PLACE NETTE நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. Marseille , Lille, Roubaix, Strasbourg, Besançon, Lyon, Dijon, Clermont-Ferrand உள்ளிட்ட பெரு நகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை தீவிரமான தேடுதல்பணி இடம்பெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று Avallon (Yonne) நகரில் 70 கிலோ கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்