Paristamil Navigation Paristamil advert login

இலங்கை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

இலங்கை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

8 சித்திரை 2024 திங்கள் 02:46 | பார்வைகள் : 1987


இந்த மாதத்தின் கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 15,675 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இருந்து 2,349 பேரும், ரஷ்யாவில் இருந்து 1,882 பேரும் ஜேர்மனியில் இருந்து 1,438 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

அத்துடன், கடந்த மாதத்தில் மாத்திரம் 291,081 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்