Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம்! இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

8 சித்திரை 2024 திங்கள் 12:03 | பார்வைகள் : 6695


கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(08) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 294 ரூபாய் 34 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 92 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 303 ரூபாய் 89 சதமாக பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 304 ரூபாய் 28 சதமாக காணப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்