உத்தம வில்லன்' பட விவகாரம் நாளை கமல்ஹாசன் வருவாரா?
9 வைகாசி 2024 வியாழன் 15:17 | பார்வைகள் : 1348
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’உத்தம வில்லன்’ என்ற திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில் இந்த படத்தால் இயக்குனர் லிங்குசாமி மிகப்பெரிய நஷ்டம் அடைந்த நிலையில் அந்த நஷ்டத்தை ஈடுகட்ட கமல்ஹாசன் ஒரு திரைப்படத்தில் நடித்து தருவதாக வாக்குறுதி அளித்து இருந்ததாக கூறப்பட்டது.
ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக இந்த வாக்குறுதியை கமல்ஹாசன் நிறைவேற்றாத நிலையில் இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் அளித்திருந்தார். இந்நிலையில் விரைவில் ஒரு குழு அமைத்து இது குறித்து கமல்ஹாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் ’உத்தம வில்லன்’ நஷ்ட விவகாரம் குறித்து நாளை கமல்ஹாசனுடன் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் இந்த பேச்சு வார்த்தையில் சமூகமான முடிவு எட்ட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்த பேச்சுவார்த்தைக்கு கமல்ஹாசன் நேரடியாக வருவாரா? அல்லது தனது சார்பில் ஒருவரை அனுப்பி வைப்பாரா என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை. சென்னை அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் முடிவில் என்ன முடிவு எட்டப்படும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.