Paristamil Navigation Paristamil advert login

யாழ். வடமராட்சியில் சிறுமிக்கு பிறந்த குழந்தை: தலைமறைவாகிய சிறுமி

யாழ். வடமராட்சியில் சிறுமிக்கு பிறந்த குழந்தை:  தலைமறைவாகிய  சிறுமி

11 வைகாசி 2024 சனி 11:07 | பார்வைகள் : 984


யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவருக்கு பிறந்த குழந்தை யாழ் போதனா வைத்தியசாலையில் ஆதரவின்றி விட்டு செல்லப்பட்டுள்ளது.

வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் பிரசவத்திற்காக தனது தாயுடன் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை வைத்தியசாலையில் விட்டுச் சென்றுள்ளனர்.

சிறுமி மற்றும் அவரது தாயை இன்று சனிக்கிழமை காலை முதல் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்